இலங்கையில் 2025 இல் மாகாண சபைத் தேர்தல் இல்லை: அரசாங்கம்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் உட்பட 6 மாதங்களுக்குள் அரசாங்கம் ஏற்கனவே மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளதாக மேற்கோள்காட்டி, மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாணந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜயதிஸ்ஸ, அரசாங்கம் தொடர்ச்சியாக தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை எனவும், அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
“மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து, பிரதான தேர்தல்கள் முடிவடையும். மாகாண சபைத் தேர்தல் மாத்திரமே நடைபெறவுள்ளது, அதற்காக சில சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். எனவே இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது” என்று அவர் கூறினார்





