நாடாளுமன்றுக்கும் நாளை விடுமுறை!
நாடாளுமன்ற அமர்வு நாளை (18) நடைபெறமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று (17) கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான கூட்டத்திலேயே இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர்ச்சூழலால் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக வாரந்தோறும் புதன்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமையவே நாளை நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் மற்றும் வெள்ளிக்கிழமை ஏற்கனவே திட்டமிட்டபடி சபை அமர்வு இடம்பெறும்.





