இலங்கை

சஜித்தைக் கொல்வது தொடர்பில் யாருக்கும் ஆர்வமில்லை- பாலித்த ரங்கே பண்டார

சஜித்தைக் கொலை செய்வதில் யாருக்கும் ஆர்வமில்லையென ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

”சஜித்தைக் கொலை செய்வதில் யாருக்கும் ஆர்வமில்லை. நாங்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை” என அவர் தெரிவித்தார்.

“எவ்வாறாயினும், திரு. பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக, அடிக்கடி ஊடக சந்திப்புகளில் கலந்து கொள்ளும் ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் எனக்கு அறிவித்தார். பிரேமதாச பகிரங்கமாக பொய் கூறுவதாக இந்த உறுப்பினர் எனக்குத் தெரிவித்தார்” என பாலித்த மேலும் தெரிவித்தார்.

“அத்துடன் சஜித் கடந்த காலங்களில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதும் எமக்குத் தெரியும். கரு ஜயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஒருமுறை போட்டியிடச் செய்தார், பின்னர் 2022ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்த போது புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறுகையில் டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்தார்” என பாலித்த சுட்டிக்காட்டினார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!