செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இனி வாக்காளர் படங்களுடன் கூடிய சீட்டு இல்லை

தமிழ்நாட்டில் வாக்காளர் படங்களுடன் கூடிய சீட்டுக்குப் பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு மட்டுமே வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுவரை காலம் தேர்தல்களின் போது வாக்களிக்கும் இடங்கள் குறித்த விபரங்களை, வாக்காளர்களின் படங்களுடன் தேர்தல் ஆணையம் வழங்கி வந்த
நிலையில் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, வாக்காளர் தகவல் சீட்டு, வாக்குப்பதிவு செய்வதற்கான அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார், கடவுச்சீட்டு, பேன் அட்டை (PAN) மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட 12 ஆவணங்கள் தம்வசம் இருந்தாலும் வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையெனில் வாக்களிக்க
முடியாது என தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் திகதி சட்ட சபைத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!