பிரிகோஜினின் மரணம் குறித்து சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப்படாது – ரஷ்யா!
வாக்னர் கூலிப்படையினரின் தலைவர் பிரிகோஜினின் மரணம் தொடர்பில் சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமளிக்கப்படாது என ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள க்ரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதை கவனத்தில் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரில் வாக்னர் குழுவினர் பெரும்பாலான வெற்றிகளை ரஷ்யாவிற்கு தேடி தந்துள்ளனர். போரில் இவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே போரில் ஈடுபட தேவையான ஆயுதங்களை ரஷ்ய அரசு வழங்கவில்லை என பிரிகோஜின் குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சியிலும் அவர் ஈடுபட்டார்.
இந்த விடயம் நடத்து சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், விமான வித்தொன்றில் பிரிகோஜின் உள்ளிட்ட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.