அரசியலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை – மஹிந்தவின் திடீர் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தோ அல்லது கட்சிக்கு அப்பாற்பட்ட வேறு எந்த அரசியல் தலைவர்களிடமிருந்தோ இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிகழ்ச்சிக்கு தெரிவித்தார்.
பல அரசியல்வாதிகள் தம்மைச் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஜனாதிபதி வேட்புமனு வழங்குமாறு யாரும் கேட்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தான் செயற்பாட்டு அரசியலில் தொடர்ந்தும் செயற்படுவேன் என அவர் குறிபபிட்டுள்ளார்.
அரசியலில் இருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)