வட அமெரிக்கா

ரஷ்யாவிம் எண்ணெய் கொள்முதல் செய்யும் சீனா மீது உடனடித் தடைகள் இல்லை ; ட்ரம்ப்

ரஷ்ய எண்ணெய் வாங்கும் சீனா மீது தான் உடனடியாகத் வரி விதிப்பு விதிக்க வேண்டியதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.ஆனால், அது குறித்து இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பரிசீலிக்க வேண்டி வரலாம் என்று அவர் தெரிவித்தார்.

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்றால் ரஷ்யா மீதும் அதன் எண்ணெய்யை வாங்கும் மற்ற நாடுகள் மீதும் வரிகள் விதிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.இதில் சீனாவும் இந்தியாவுமே ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் நாடுகள்.

இந்நிலையில், இந்தியா தொடர்ந்து ரஷ்ய எண்ணெய்யை வாங்கி வருவதாகக் கூறி சென்ற வாரம் அதிபர் டிரம்ப் அந்நாட்டின் மீது 25% கூடுதலாக வரி விதித்தார்.எனினும், சீனா மீது அவர் அதுபோன்ற கூடுதல் வரி விதிப்பு எதுவும் செய்யவில்லை.

தற்பொழுது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பு உக்ரேன் போரை நிறுத்தவோ, முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் தீர்வு காணப்படாத நிலை உள்ளது. எனவே, சீனா மீது தடைகள் விதிக்கும் எண்ணம் உண்டா என ஃபாக்ஸ் ஊடகத்தின் சோன் ஹேனிட்டி கேள்வி எழுப்பினார்.

“இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதுபற்றி நான் சிந்திக்க வேண்டியிருக்கும். ஆனால், அது குறித்து இப்பொழுது யோசிக்க வேண்டியதில்லை. ஏனெனில் புட்டினுடனான சந்திப்பு மிக நன்றாக இருந்தது,” என்று டிரம்ப் சொன்னார்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்