காஷ்மீர் விவகாரத்தில் தலையீடு செய்ய விருப்பமில்லை – அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை என வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடி பிரச்சனை என்பதால், அதில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை என்றார்.
உலக பிரச்சனைகளை கையாண்டு வரும் அதிபர் டிரம்ப், அழைப்பு விடுக்கப்பட்டால் எந்தவொரு பிரச்சனையிலும் தீர்வு காண தயார் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்திருந்தார்.
மோடி – டிரம்ப் உறவு வலுவானது என்றும், மோடியின் பிறந்த நாளில் டிரம்ப் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்தியா – அமெரிக்கா இடையே ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், அதை சரிசெய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஐ.நா. கூட்டத்தின்போது இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து வணிகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசித்தனர்.





