இலங்கை

போதைபொருள் சார்ந்த குற்றங்களுக்கு மரண தண்டனை பற்றி தீர்மானம் எடுக்கப்படவில்லை ;அமைச்சர் நளிந்த

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள் எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்றது.

இதன்போது போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சமூகத்தில் எழுந்துள்ள கருத்தாடல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

‘மரண தண்டனை வழங்குவது பற்றி தீர்மானம் எடுக்கப்படவில்லை. சமூகத்தில் கருத்தாடல் உருவாகி இருந்தாலும் அரசாங்க மட்டத்தில் கலந்துரையாடல் ஆரம்பமாகவில்லை.” என்றார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்