ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – தமிழரசு கட்சியின் முடிவு!
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது.
நம்பிக்கையில்லா பிரேணை குறித்து கையொப்பம் சேகரிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மேற்படி அறிவித்துள்ளார்.
கல்வி அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லாததால் கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கட்சித் தலைமையுடன் இந்த விவகாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டதை தொடர்ந்தே மேற்படி முடிவெடிடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.





