இலங்கை: லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
ஒக்டோபர் மாதத்திற்கான உள்நாட்டு எல்பி எரிவாயுவின் விலையில் மாற்றமில்லாமல் இருக்கும் என Litro Gas Lanka நிறுவனம் தீர்மானித்துள்ளது.
புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, முதன்மை எரிவாயு விநியோகஸ்தர் இந்த முடிவை இன்று அறிவித்தார்.
முன்னாள் அரசாங்கத்தின் கீழ், செப்டம்பர் மாதத்திலும் தற்போதைய விலையைப் பேணிய பின்னர், Litro Gas அதன் விலைகளை இன்னும் திருத்தவில்லை.
தற்போதைய விலைகள் பின்வருமாறு;
12.5 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர்:
ரூ.3,690
5 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர்:
ரூ.1,482
2.3 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர்:
ரூ 694





