ஒன்டன்செட்ரான் ஊசி மருந்து விவகாரம்: ஆய்வக அறிக்கை தாமதமாவது ஏன்
சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரான் (Ondansetron) ஊசி மருந்து தொடர்பான ஆய்வக அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் இறுதியாக மௌனம் கலைத்துள்ளது.
இந்த ஊசி மருந்து செலுத்தப்பட்ட இரு நோயாளிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 13-ஆம் திகதி அதன் நான்கு தொகுதிகள் மீளப்பெறப்பட்டன.
இது குறித்த பரிசோதனைகள் சிக்கலானவை என்பதால் முடிவுகளை அவசரமாக வெளியிட முடியாது என ஆணையத்தின் தலைமை அதிகாரி டொக்டர் குமுது பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த மாதிரிகள் சர்வதேச தரத்திலான ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறுதி அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முறையான தரப் பரிசோதனைக்குப் பின்னரே இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.





