இணையத்தில் வைரலாகும் அம்பானியின் மனைவி – கையில் சிக்கிய ரகசியம்

இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) மனைவி நீதா அம்பானி (Nita Ambani) தன்வசம் வைத்திருந்த கைப்பை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 12ஆம் திகதி மும்பையில் நடைபெற்ற தீபாவளி விருந்தில் கலந்து கொண்ட நீதா அம்பானி, உலகின் மிக விலையுயர்ந்த கைப்பைகளில் ஒன்றுடன் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ராவின் (Manish Malhotra) வீட்டில் நடந்த தீபாவளி விருந்தில் கலந்து கொண்டபோது, 2 மில்லியன் டொலருக்கும் அதிகமாக இருந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்விற்காக மின்னும் வெள்ளி சீக்வின் புடவையை அணிந்திருந்த நீதா அம்பானி, தனது தனிப்பட்ட சேகரிப்பிலிருந்து தனித்துவமான நகைகளை அணிந்திருந்தார்.
அவற்றில் அரிய இதய வடிவிலான கொலம்பிய மரகத காதணிகள் மற்றும் வைர வளையல் ஆகியவை இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
அவரது வரிசைப்படுத்தப்பட்ட புடவை மற்றும் பெரிய மரகத காதணிகள் சமூக ஊடக பயனர்களைக் கவர்ந்தாலும், தனித்துவமான அம்சம் கொண்ட , சாக் பிஜோ (Sac Bijou) என்ற பெயர் கொண்ட ஹெர்ம்ஸ் (Hermès) நிறுவனத்தின் பிர்கின் பை அனைவரதும் அவதானத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த தனித்துவமான மற்றும் விலையுயர்ந்த துணை ஹெர்ம்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான வைரம் பதிக்கப்பட்ட பதிப்பாகும்.
இந்த பையின் மதிப்பு 2 மில்லியன் டொலராகும். அரிய சாக் பிஜோ உலகின் மிகவும் விலையுயர்ந்த ஹெர்ம்ஸ் பிர்கின் பை ஆகும்.
உலகளவில் மூன்று சாக் பிஜோ பிர்கின்கள் மட்டுமே உள்ளன. இந்த தனித்துவமான கைப்பை திடமான வெள்ளை தங்கம் ஊடாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது 3,025 மின்னும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, மொத்தம் 111.09 காரட் எடை கொண்டது. சாக் பிஜோவை ஹெர்மெஸில் உள்ள நுண் நகைகளின் படைப்பாற்றல் இயக்குனர் பியர் ஹார்டி வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.