ஓட்டுநர் இல்லாத வாகனங்களை அறிமுகம் செய்யும் Nissan!
ஜப்பானில் ஓட்டுநர் இல்லாத டாக்சிகளை அறிமுகம் செய்ய Nissan நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய சேவையை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகியுள்ளது.
தோக்கியோவின் தெற்கே யொக்கொஹாமா பகுதியில் சிறிய வேன்களைக் கொண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சோதனை நடத்தவிருப்பதாக நிறுவனம் அறிவித்தது.
மூப்படையும் சமுதாயத்தால் ஓட்டுநர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாய் Nissan குறிப்பிட்டது.
புதிய சேவைகளை வழங்கும் முயற்சியில் உள்ளூர் ஆணையங்களுடனும் போக்குவரத்து நிறுவனங்களுடனும் பணிபுரியவிருப்பதாய் Nissan சொன்னது. சாலைகளில் தானியக்க வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கிறது ஜப்பான்.
அந்தத் தொழில்நுட்பத்தைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
(Visited 6 times, 1 visits today)