இந்தியாவில் நிபா வைரஸ் தொற்றால் இருவர் பலி!
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்துப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நிபா வைரஸால் மூளை செல்கள் அழிந்து, உமிழ்நீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களிடையே பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நோய் தாக்கிய பன்றிகள் மற்றும் வௌவால்கள் மூலம் பரவுவதாகவும், அதற்கான சிகிச்சை இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)





