ஒன்பது ஈரானியர்களுக்கு ஆயுள் தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹெரோயின் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் விசாரணையின் பின்னர் ஒன்பது ஈரானியர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையின் எல்லைக்குள் அக்குரள பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் ஈரானியர்கள் ஒன்பது பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா ஆயுள் தண்டனை விதித்தார்.
குற்றவாளிகள் ஒன்பது பேரும் 2019 பெப்ரவரி 24 ஆம் திகதி அக்குறள கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடத்தல் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினர் ஈரானிய கடற்படையினருடன் மீன்பிடி இழுவை படகில் சுமார் 100 கிலோ ஹெரோயினை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட ஹெரோயின், பரிசோதனைக்காகவும் அறிக்கைக்காகவும் அரச பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.
சுமார் 84 கிராம் பொதிகளில் ஹெரோயின் இருந்ததாக அரசாங்கப் பகுப்பாய்வாளர் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது
குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ரணராஜா தீர்ப்பளித்தார்.