அரசியல் இலங்கை செய்தி

ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் நிமல் விடுத்துள்ள அறிவிப்பு!

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை ஆராயும்போது, ஆட்சி கவிழ்ப்பு பணியை எதிரணி செய்யவேண்டியதில்லை. அவர்களாகவே தம்மை கவிழ்த்துக்கொள்வார்கள்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் SLFP நிமல் சிறிபால டி சில்வா Nimal Siripala de Silva தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசியல் களத்தில்போன்று வேறு எங்கும் பாரிய சவால்கள் கிடையாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டும் அல்ல, அனைத்து கட்சிகளுக்குள்ளும் இன்று உள்ளக மோதல் உள்ளது. ஆளுங்கட்சிகூட பிளவுபட்டுதானே உள்ளது.

எனவே, யதார்த்த அரசியலை புரிந்துகொண்டு கட்சியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். முன்னோக்கி செல்வது பற்றி ஆராய வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம். நிச்சயம் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி என்ற நிலைக்கு கட்சியை கொண்டுவரலாம்.

எனது அரசியல் வாழ்வில் நான் என்றும் அவசரப்பட்டதில்லை. படிப்படியாகவே வளர்ந்துவந்தேன். எனவே, கட்சியை விட்டு சென்ற அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன். – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!