ஐரோப்பா செய்தி

சுவிட்சர்லாந்தில் 40 பேரின் உயிரைப் பறித்த தீ விபத்து: நாடு முழுவதும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) பகுதியில் புத்தாண்டு தினத்தன்று 40 இளைஞர்களின் உயிரைப் பறித்த தீ விபத்துக்காக நாடு முழுவதும் இன்று தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

விபத்து நடந்த விடுதிக்கு அருகிலுள்ள தேவாலயங்களில் நினைவேந்தல் வழிபாடுகள் நடைபெற்றதோடு, சுவிஸ், பிரான்ஸ் மற்றும் இத்தாலியத் தலைவர்கள் இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, விபத்துக்குக் காரணமான ‘லெ கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) விடுதியின் உரிமையாளர் ஜாக் மொரெட்டி, அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லலாம் என்ற அச்சத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷாம்பெயின் போத்தலில் கட்டப்பட்டிருந்த மத்தாப்பு தீப்பொறி மேல்தளத்தில் பட்டதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், கடந்த 5 ஆண்டுகளாக அந்த விடுதியில் எவ்வித பாதுகாப்பு சோதனைகளும் நடத்தப்படவில்லை என உள்ளூர் அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!