76 இஸ்லாமிய போராளிகளை கொன்று குவித்த நைஜீரிய இராணுவம் : 72 பேர் கைது!
நைஜீரிய துருப்புக்கள் நாட்டின் வடகிழக்கில் போர்னோ மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 76 இஸ்லாமிய போராளிகளைக் கொன்றதாக இராணுவம் அறிவித்துள்ளது.
ஜனவரி 7 முதல் ஜனவரி 13 வரை இந்த நடவடிக்கைகள் நடந்ததாக நைஜீரிய இராணுவ செய்தித் தொடர்பாளர் எட்வர்ட் புபா தெரிவித்துள்ளார்.
இராணுவம் 72 சந்தேக நபர்களைக் கைது செய்ததாகவும், போராளிகளால் கடத்தப்பட்ட எட்டு பணயக்கைதிகளை மீட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
தீவிரவாதிகளின் தொடர்பு குறித்து பூபா விவரங்களை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





