அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்தியில் பல கைதிகளை விடுவித்த நிகரகுவா
அமெரிக்க(America) ஜனதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) நிர்வாகத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து நிகரகுவாவின்(Nicaragua) இடதுசாரி அரசாங்கம் டஜன் கணக்கான கைதிகளை விடுவித்துள்ளது.
ஜனாதிபதி டேனியல் ஓர்டேகாவின்(Daniel Ortega) அரசாங்கம் ஒரு அறிக்கையில், “தேசிய சிறைச்சாலை அமைப்பில் இருந்த பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் குடும்பங்களுக்கு சென்றுவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
விடுவிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையையோ அல்லது அவர்கள் எந்த காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்று அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
ஒர்டேகாவின் அரசாங்கத்தின் 19 ஆண்டுகால நிறைவை நினைவுகூரும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை விவரித்தாலும் அமெரிக்காவின் பலத்த அழுத்தத்தாலே விடுதலை இடம்பெற்றுள்ளது.





