NHS அறக்கட்டளையின் காலதாமதம் : அநியாயமாக பறிபோன உயிர்!
பிரித்தானியாவில் நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து NHS அறக்கட்டளை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தின் சுகாதார ஆம்புட்ஸ்மேன் (ombudsman -குறைக்கேள் அதிகாரி) குறித்த நோயாளியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2023 இல் இறுதியில் கருப்பை புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட பெண் ஒருவர், நீண்ட நேர காத்திருப்பு காரணமாக கீமோதெரபி (chemotherapy) சிகிச்சையை பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.
இதன்காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பாராளுமன்ற மற்றும் சுகாதார சேவை குறைக்கேள் அதிகாரி அறக்கட்டளையின் தோல்விகள் நோயாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அறிவித்துள்ளது.
காத்திருப்பு நேரங்கள் மற்றும் பிற மேம்பாடுகளை மறுபரிசீலனை செய்ய பரிந்துரைத்துள்ளதுடன், மேற்படி நோயாளியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.





