அடுத்த வருடம் ஒரு குடும்பம் 24000 VAT செலுத்த வேண்டும்!!! வெளியான தகவல்
எதிர்வரும் வருடத்தில் இருபதாயிரம் ரூபாவைத் தாண்டும் வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டளவில் அரசாங்கம் சுமார் 1400 பில்லியன் ரூபாவை எதிர்பார்க்கிறது, எனவே இந்த நாட்டில் சராசரியாக 4 பேர் கொண்ட குடும்பம் சுமார் 20,400 ரூபாவை VAT வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்றார்.
கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 203% வளர்ச்சி என்றும், 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 105% வளர்ச்சி என்றும் அவர் கூறினார்.
இந்நிலைமை காரணமாக உள்ளுர் வர்த்தகங்கள் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவும், உள்ளுர் உற்பத்திகளுக்கான தேவை அதிகரிப்பின் காரணமாக பொருட்களின் விலைகளும் அதீதமாக அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.