இரண்டாவது T20 போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி

நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
அந்த வகையில், இரு அணிகள் மோதிய 2வது டி20 கிரிக்கெட் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. கேப்டன் சல்மான் ஆஹா 28 பந்துகளில் 46 ரன்களை எடுத்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது.
இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் ஷெய்பர்ட் 22 பந்துகளில் 45 ரன்கள், ஆலன் 16 பந்தில் 38 ரன்களை அடித்தனர்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
(Visited 1 times, 1 visits today)