நான்காவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், இன்று நான்காவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில்(Visakhapatnam) நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் குவித்தது.
நியூசிலாந்து அணி சார்பில், டெவோன் கோன்வே(Glenn Phillips) 44 ஓட்டங்களும் டிம் செய்பெர்ட்(Tim Seifert) 62 ஓட்டங்களும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 216 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இந்திய அணி சார்பில், ரிங்கு சிங்(Rinku Singh) 39 ஓட்டங்களும் அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே(Shivam Dube) 65 ஓட்டங்களும் பெற்றனர்.
மேலும், இந்த நான்காவது போட்டிக்கு அணியில் சேர்க்கப்பட்ட நியூசிலாந்து வீரர் டிம் செய்பெர்ட்(Tim Seifert) சிறப்பாக விளையாடி போட்டியின் ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.




