பதிலடி கொடுத்தது நியூசிலாந்து: 20 ஆம் திகதி 3ஆவது போட்டி!
தென்னாபிரிக்கா South Africa மற்றும் நியூசிலாந்து New Zealand அணிகளுக்கிடையிலான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (20) நடைபெறவுள்ளது.
நேற்று நடைபெற்ற 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிபெற்றது.
2 ஆவது போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாபிரிக்கா அணி 15.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது.
இதன் அடிப்படையில் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இதனால் இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.




