ட்ரம்பின் காசா அமைதி வாரியத்தில் இணைய நியூசிலாந்து மறுப்பு!
டொனால்ட் ட்ரம்பின் அமைதி வாரியத்தில் சேருவதற்கான அழைப்பை நியூசிலாந்து நிராகரித்துள்ளது.
காசா அமைதி வாரிய திட்டம் தொடர்பில் தெளிவான விளக்கங்கள் இல்லை என்றும், கூடுதல் தகவல்கள் தேவை என்றும் அந்நாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் (Christopher Luxon) கூறியுள்ளார்.
அத்துடன் காசாவிற்கான ஐ.நா. சாசனத்திற்கு இணக்கமானதாக வாரியத்தின் பணி இருக்க வேண்டியதன் அவசியத்தை வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் (Winston Peters) வலியுறுத்தியுள்ளார்.
துருக்கி, எகிப்து மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் வாரியத்தில் இணைந்துள்ளன, இது மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, நோர்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இதில் சேர மறுப்பு தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது நியூசிலாந்தும் இணைந்துள்ளது.





