இந்திய மண்ணில் நியூசிலாந்து சாதனை: Virat Kohliலியும் அசத்தல்!
நியூசிலாந்து New Zealand அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தனி ஆளாகப் போராடிய விராட் கோஹ்லி Virat Kohli சதமடித்து அசத்தி, சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3வது துடுப்பாட்ட வீரராகக் களம் இறங்கி அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். (12,665 ஓட்டங்கள்)
கோஹ்லிக்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங் – 12, 662 ஓட்டங்கள் (330 இன்னிங்ஸ்) , இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார 9,747 (238 இன்னிங்ஸ்) ஆகியோர் உள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் கோஹ்லி நிலைநாட்டியுள்ளார். (7 சதங்கள்)
நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன்மூலம் இந்திய மண்ணில் சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று நியூசிலாந்து அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா சந்திக்கும் முதல் ஒருநாள் தொடர் தோல்வி இதுவாகும்.
1988-ஆம் ஆண்டுக்குப் பிறகு (37 ஆண்டுகள்) இந்திய மண்ணில் நியூசிலாந்து பெறும் முதல் இருதரப்பு ஒருநாள் தொடர் வெற்றி இதுவாகும்.





