செய்தி விளையாட்டு

திடீரென ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்

டி20 உலகக் கோப்பை தொடரில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து, தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. எனவே அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியவில்லை.

இதையடுத்து, நியூசிலாந்து அணி 3-வது ஆட்டத்தில் உகாண்டா அணியுடன் இன்று மோதியது. இதில் உகாண்டா அணியை 40 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து இலக்கை வெறும் 5.2 ஓவர்களிலேயே கடந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், போட்டி முடிந்ததும் பேட்டி அளித்த நியூசிலாந்து முன்னணி வீரரான டிரெண்ட் போல்ட், இதுவே தனது கடைசி டி20 உலகக் கோப்பை என அதிரடியாக அறிவித்தார்.

எதிர் வரும் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டமே போல்ட்டின் கேரியரில் கடைசி டி20 உலகக் கோப்பை போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள போல்ட் 32 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். நடப்பு தொடரிலும் நியூசிலாந்து சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக உள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!