புத்தாண்டு கொண்டாட்டம் – தனது பாரம்பரியத்தை மாற்றிய ஹொங்கொங்!
ஹொங்காங் (Hong Kong) தனது பாரம்பரிய புத்தாண்டு தின வாணவேடிக்கை நிகழ்ச்சியை விக்டோரியா துறைமுகத்தில் இம்முறை இரத்து செய்துள்ளது.
நவம்பரில் ஏற்பட்ட பேரழிவுகரமான தீ விபத்தில் 161 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாணவேடிக்கைகளுக்குப் பதிலாக, நகரத்தின் மத்தியில் ஒரு இசை நிகழ்ச்சியையும் எட்டு முக்கிய அடையாளங்களில் மூன்று நிமிட ஒளி நிகழ்ச்சியையும் நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாச்சாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாவுக்கான செயலாளர் ரோசன்னா லா (Rosanna Law), இந்த ரத்து சில ஹோட்டல் மற்றும் உணவக வணிகங்களை பாதிக்கும் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் இது வரலாற்றில் முதல் முறையாக இடம்பெறும் ஒரு விடயம் அல்ல.
கடந்த காலங்களிலும், 2019 போராட்டங்கள் மற்றும் COVID-19 தொற்றுநோய்களின் போதும் இரத்து வாணவேடிக்கை கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





