அமெரிக்காவில் பரவி வரும் புதிய காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் பரவி வரும் புதிய காட்டுத்தீ, ஆபத்தான பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுவதை துரிதப்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட ஹியூஸ் எனப்படும் புதிய காட்டுத் தீயால் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவு ஏற்கனவே முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது.
பலத்த காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்துவது கடினம் என்று தீயணைப்பு வீரர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், தீ நிலைமையில் சுமார் 14% கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.





