சிங்கப்பூரில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த அறிமுகமாகும் புதிய திட்டங்கள்
சிங்கப்பூரில் வீடுகளில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த உதவும் பாகங்களைப் பொருத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அந்தப் புதிய திட்டத்தால் தண்ணீர்ப் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்று தேசியத் தண்ணீர் அமைப்பான PUB தெரிவித்துள்ளது.
நகர மன்றங்கள் அதிக சக்தி வாய்ந்த கழுவும் இயந்திரங்களுக்கு மாறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 2 வருடங்களில் இந்த நடைமுறை நடப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய இயந்திரங்கள் 20 சதவீத கூடுதலான ஆற்றல்மிக்கவை என்று கூறப்பட்டது. அதனால் ஒரு நாளில் 2.5 மில்லியன் கேலன் தண்ணீரைச் சேமிக்க முடியும்.
சிங்கப்பூர் உலகத் தண்ணீர் தினத்தோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர தண்ணீர்ச் சேமிப்பு இயக்கத்தில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.





