காங்கோவில் ஊட்டச்சத்து குறைப்பாடுள்ளவர்களை எளிதில் தாக்கும் புதிய வைரஸ்!

காங்கோ ஜனநாயகக் குடியரசில் மர்மமான புதிய வைரஸ் பரவி வருவதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது.
WHO அதிகாரிகள் டிசம்பர் முதல் வாரத்திற்குள் 416 நோயாளிகளையும் 31 இறப்புகளையும் பதிவு செய்துள்ளனர்.
இந்த புதிய வைரஸ் தொற்றானது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை அதிகளவு பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயின் அறிகுறிகள் “சில குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு மற்றும் இறந்த சிலருக்கு ஃப்ளூவை ஒத்திருக்கிறது” என்று DRC சுகாதார அமைச்சர் சாமுவேல் ரோஜர் கம்பா கூறியுள்ளார்.
HO இப்பகுதியில் சில சோதனைகளை மேற்கொண்டது, அவை மலேரியாவுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளன, இருப்பினும் உண்மையான காரணம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
(Visited 10 times, 1 visits today)