அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு – சீனா எடுத்த அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பை எதிர்த்து உலக வர்த்தக நிறுவனத்திடம் முறையிடவுள்ளதாக சீனா, தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் அணுகுமுறை தவறானது என்று சீன வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.
அதன் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தை அமெரிக்காவின் புதிய வரி கடுமையாகப் பாதிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
விலைவாசி உயரக்கூடும்; வேலைகள் பாதிக்கப்படக்கூடும் என்று அவர்கள் சுட்டியுள்ளனர்.
எண்ணெய், எரிவாயு, நுண்சில்லு, உலோகம் முதலியவற்றுக்கு விரைவில் புதிய வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)