உலகம் செய்தி

நீருக்கடியில் பலூன் வடிவிலான புதிய உயிரினம் கண்டுப்பிடிப்பு!

தெற்குப் பெருங்கடலின் அடிப்பகுதியில் ஏராளமான புதிய உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கடல் உயிரியலாளர்கள் தெற்கு சாண்ட்விச் தீவுகளில் (Sandwich Islands)  புதிய உயிரினங்களைத் தேடுவதற்காக ஷ்மிட் பெருங்கடல் நிறுவனத்தின் ஆராய்ச்சிக் கப்பலான “ஆர்/வி பால்கோரில் “R/V Falkor (too)”  ஒரு பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த பயணத்தின் முடிவு விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏறக்குறைய 30 வகையான புதிய உயிரினங்களை அவர்கள் இனங்கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த உயிரினங்களில் கோள வடிவத்தில் உள்ள கடற்பாசிகளும் அடங்குவதாக தெரிவித்துள்ளனர்.

அதேபோல் முன்னர் அறியப்படாத கடல் நட்சத்திர இனங்கள், முன்னர் அறியப்படாத சில வகையான மீன்கள் உள்பட 30 உயிரினங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளனர். சில உயிரினங்கள் அடையாளப்படுத்தப்படவில்லை என்றும், அவற்றை பகுப்பாய்வு செய்து வருதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி