தெற்கு கடல்பகுதியில் புதிய போக்குவரத்து திட்டம் ; நிராகரித்துள்ள இலங்கை
இலங்கைக்கு தெற்கே கடல் பகுதியில் புதிய போக்குவரத்தை தொடங்கும் திட்டத்தை இலங்கை நிராகரித்துள்ளது.
சர்வதேச கடல்சார் அமைப்பின் கீழ் செயற்படும் கடல்சார் சுற்றுசூழல் பாதுகாப்புக் குழுவின் 80வது அமர்வில் இதற்கான முன்மொழிவு பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் கொண்டு வரப்பட்டது.
ஆனால் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டால் வடக்கு இந்திய பெருங்கடலில் அழிந்து வரும் நீலத்திமிங்கலங்கள் மீது கப்பல்கள் மோதுவது அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. எனவே இந்த முன்மொழிவை ஆரம்ப நிலையிலேயே நிராகரிப்பதாக தெரிவித்தது.
(Visited 13 times, 1 visits today)





