புதிய வரிகள் 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் – சீனாவை கைவிட்ட டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை உட்பட பல நாடுகள் மீது விதிக்கவுள்ளதாக அறிவித்திருந்த புதிய வரிகளை 90 நாட்களிற்கு இடைநிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
எனினும் 10 வீத வரி தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும்.
இருப்பினும், சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா விதித்த 104 சதவீத வரி 125 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இறக்குமதிகள் மீது 84 சதவீத வரி விதிக்கப்படும் என்று சீன நிதி அமைச்சகம் முன்பு அறிவித்தது.
அதன்படி, சீனாவின் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா வரி விகிதத்தை 125 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





