சிங்கப்பூர் சிம் அட்டை தொடர்பில் புதிய சட்டம்
சிங்கப்பூர் சிம் அட்டை தொடர்பில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதற்கமைய, அட்டைகளைக் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மோசடிகளுக்காக சிம் அட்டைகள் விற்கப்படுவதையும் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கப் புதிய சட்டம் உதவும்.
குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தச் சட்டபூர்வமாய் சிம் அட்டைகளை வாங்குவோரைத் தண்டிப்பது நோக்கமல்ல என்று இரண்டாம் உற்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) கூறினார்.
பொறுப்பில்லாமல் சிம் அட்டைகளுக்குப் பதிவு செய்பவர்கள், அவற்றைப் பெறுபவர்கள், வைத்திருப்பவர்கள், விநியோகிப்பவர்கள், கடைக்காரர்கள் ஆகிய பிரிவினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் வழியமைக்கிறது.
பணம் வாங்கிக்கொண்டு சிம் அட்டைகளை அடுத்தவருக்குக் கொடுப்பவர்கள் அது குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்படுமெனத் தமக்குத் தெரியாது என்று சொல்லி இனி தப்பமுடியாது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூவாண்டுச் சிறை, 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.