புதிய ஆட்சி மாற்றம்! இலங்கையில் பல மாகாண ஆளுநர்கள் ராஜினாமா

புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, பல மாகாண ஆளுநர்கள் இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்த ஆளுநர்கள் வருமாறு:
மத்திய மாகாண ஆளுநர் – லலித் யூ. கமகே
வடமத்திய மாகாண ஆளுநர் – மஹிபால ஹேரத்
தென் மாகாண ஆளுநர் – லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன
கிழக்கு மாகாண ஆளுநர் – செந்தில் தொண்டமான்
சப்ரகமுவ மாகாண ஆளுநர் – நவின் திஸாநாயக்க
ஊவா மாகாண ஆளுநர் – அனுர விதானகமகே
இதேவேளை, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஊடகப் பிரிவும் திருமதி சார்ள்ஸின் பதவி விலகலை அறிவித்துள்ளது.
(Visited 42 times, 1 visits today)