பிரான்ஸில் பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய திட்டம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு
பிரான்ஸில் பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு வகுப்புகள் வழங்கப்படும் என தேசிய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
“AI இன் சார்புகள் மற்றும் வரம்புகள் குறித்து மாணவர்களுக்கு நாம் கல்வி கற்பிக்க வேண்டும்.” என அமைச்சர் Élisabeth Borne தெரிவித்துள்ளார்.
அவர், இது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு புரட்சி, நமது கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் உட்பட அனைத்தையும் உலுக்கி வருகிறது. தேசிய கல்வி அதைப் இணைத்துக்கொள்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டின் புதிய வகுப்புகள் ஆரம்பமாகும் போது, அதில் இந்த AI வகுப்புகள் இணைத்துக்கொள்ளப்படும்.
4 ஆம் மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயமானதாகவும், நடுத்தர வகுப்பினருக்கு விருப்பத்தின் பேரில் கற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 35 times, 1 visits today)





