பிரித்தானியாவில் கடவுசீட்டின் தேவையை நீக்கும் புதிய நடைமுறை விரைவில்
பிரித்தானியாவில் கடவுசீட்டின் தேவையை நீக்கும் முக சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை சோதிக்கும் நடவடிக்கைக்கு அரசாங்கம் தாயாராகி வருகின்றது.
இந்த ஆண்டு தொடங்கும் சோதனைகளில் பயோமெட்ரிக் கேட்களைப் பயன்படுத்தும் போது, விமானம் மூலம் பிரித்தானியாவுக்கு வருபவர்கள் கடவுசீட்டு சோதனைகளைத் தவிர்க்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
புதிய முக சரிபார்ப்பு பயோமெட்ரிக்ஸ் அமைப்பு நெருக்கடிகளை குறைக்கும், முந்தைய அமைப்புடன் ஒப்பிடும்போது, இது முக அங்கீகாரத்தையும் பயன்படுத்துகிறது என எல்லை படை இயக்குனர் நாயகம் Phil Douglas தெரிவித்துள்ளார்.
டுபாய் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முக சரிபார்ப்பு பயோமெட்ரிக்ஸ் பயன்படுத்தப்பட்ட விதத்தின் அடிப்படையில் புதிய அமலாக்கம் உள்ளது.
இது பிரித்தானியாவின் உள்வரும் மின்னணு பயண அங்கீகார (ETA) திட்டத்துடன் இணைந்திருக்கும் மற்றும் மேம்பட்ட பாதுகாப்புடன் வேகமான பயணிகளின் செயலாக்கத்தை வழங்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
தகுதியற்ற பயணிகள் நாட்டிற்கு நுழைவதனை தடுக்க, குடிவரவு அமைப்புகளுடன் இந்த அமைப்பு இணைக்கப்படும் என Phil Douglas குறிப்பிட்டார்.