ஜெர்மனியில் அமுலாகும் புதிய நடைமுறை – அரசாங்கம் எடுத்த நடவடிக்கை
ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் பற்றாக்குறையை சீர் செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுடைய பற்றாக்குறையை நீக்குவதற்கு ஜெர்மன் அரசாங்கமானது பல சட்டங்களை நிறைவேற்றி இருந்தது.
இந்நிலையில் சில விதிகளில் சில நெகிழ்வு தன்மைகளையும் கடைப்பிடித்து வந்துள்ளது.
இவ்வாறு புதிய சட்டங்களை இயற்றினால் கூட பயிற்றப்பட்ட தொழிலாளர்களை ஜெர்மன் நாட்டுக்கு விரைவில் அழைப்பது காலதாமதங்கள் ஏற்பட்டு வருகின்றது.
இதன் காரணத்தினால் ஜெர்மனியின் தொழில் அமைச்சர் ஊபேட்டஸ் ஹைல் அவர்கள் பேர்ளினில் இவ்வாறான பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் அழைத்து வருவது தொடர்பில் ஒரு ஆலோசணை கூட்டம் ஒன்றை நடத்தி இருந்தார்.
இந்த ஆலோசணை கூட்டத்தில் ஜெர்மனியின் பல தொழில் நிறுவனங்களுடைய பிரதிநிதிகள் பங்கேற்றதாகவும், இந்த தொழில் பிரிதிநிதிகளிடம் இருந்து சில ஆலோசணைகள் பெறப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.