ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பெண்களுக்காக அறிமுகமாகும் புதிய நடைமுறை – விடுக்கப்பட்ட கோரிக்கை

ஜெர்மனியில் பெண்கள் மட்டும் பயணிக்கும் சேவைகளை அறிமுகப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பெண்கள் மட்டுமே செல்லும் சேவைகளை நெரிசல் இல்லாத நேரங்களில் அறிமுகப்படுத்த வேண்டும் என பெர்லின் பசுமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பெர்லினில் உள்ள பசுமைக் கட்சிப் பிரதிநிதிகள், போக்குவரத்து சங்கங்களுக்கு இது தொடர்பில் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

2023ஆம் ஆண்டு பெர்லினில் 400 பாலியல் துன்புறுத்தல் மற்றும் பொது போக்குவரத்தில் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தென்மேற்கு பெர்லினில் உள்ள U-Bahn நிலையத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு சமீபத்திய வழக்கை சம்பவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெண்கள் மட்டும் செல்லும் சேவைகள், தளங்களில் கூடுதல் அவசர அழைப்புப் பெட்டிகள், சிறந்த வெளிச்சம் மற்றும் விரிவான வீடியோ கண்காணிப்பு ஆகியவை துஷ்பிரயோக எண்ணிக்கையை குறைக்கும் என்று பசுமைவாதிகள் தெரிவிக்கின்றனர்.

(Visited 43 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி