ஜெர்மனியில் ஜனவரி மாதம் முதல் அமுலாகும் புதிய நடைமுறை
ஜெர்மனியில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல், ஆடை கழிவுகளை அகற்றுவதற்கான புதிய சட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம் 2025 ஜனவரி மாதம் நடைமுறைக்கு வந்த பின்னர் பழைய முறையில் எஞ்சிய ஆடை கழிவுகளை அகற்ற அனுமதிக்கப்படாது.
புதிய விதிமுறைகளுக்கு இணங்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கைக்கு எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது. அதற்கு பதிலாக, அவை பயன்படுத்தப்பட்ட ஆடை கொள்கலன்களில் சேகரிக்கப்பட வேண்டும். சேதமடைந்த பொருட்களும் இந்த நடைமுறைகள் உள்ளடக்கப்படும்.
ஆடைக்கு மேலதிகமாக படுக்கை துணி, திரைச்சீலைகள் ஆகியவற்றிற்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்.
இந்த பொருட்களை இனி கொட்டுவதோ அல்லது எரிப்பதற்கோ அனுமதி இல்லை. ஆனால் அவற்றை மறுபயன்பாடு செய்வது அல்லது மறுசுழற்சி செய்யப்படும்.
இயற்கை கழிவுத் தொட்டிக்கான புதிய விதிமுறைகளும் 2025ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.