பாகிஸ்தானில் புதிய பிரதமர் நியமனம்!

பாகிஸ்தானில் தற்காலிக பிரதமராக ‘அன்வர் உல் ஹக் கக்கர்’ நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராஜா ராய்ஸ் அகமது இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பலுசிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயேச்சை எம்.பி.யாக இருந்த அன்வர்-உல்-ஹக்இ அடுத்த தேர்தல் வரை பாகிஸ்தானின் காபந்து அரசாங்கத்தை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த புதன்கிழமை கலைக்கப்பட்டது. மேலும் 90 நாட்களுக்குள் அந்நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
(Visited 10 times, 1 visits today)