இலங்கையின் புதிய ஜனாதிபதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு பயணம்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது பதவிக்காலத்தை முன்னிட்டு ஆசிர்வாதம் பெறுவதற்காக இன்று கண்டியில் உள்ள புனித பல்லக்கு ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இலங்கையின் ஒன்பதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், விருப்பு வாக்கு உள்ளடங்கலாக 57,40,179 வாக்குகளைப் பெற்று, இலங்கையின் 9ஆவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தெரிவானார்.
(Visited 49 times, 1 visits today)