இலங்கையில் புதிய ஜனாதிபதி – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவியை வழங்கி வருகின்றது.
இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில், விரைவில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
(Visited 31 times, 1 visits today)





