இலங்கையில் புதிய நடைமுறை – அறிமுகமாகும் தொழில்நுட்பம்
கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளை அடையாளம் காணும் புதிய மென்பொருள் ஒன்றை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் வீதி விபத்துகளை குறைக்கும் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாரதிகளின் கவனக்குறைவு காரணமாக கொழும்பு நகரில் கடந்த காலப்பகுதியில் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மென்பொருளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்த புதிய மென்பொருளின் மூலம் கொழும்பு நகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகள் கொழும்பில் உள்ள பிரதான CCTV செயற்பாட்டு அறையின் CCTV அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர்.
அதன்பிறகு, சாரதி வசிக்கும் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸாரிடம் குற்றம் முறைப்பாடு அளிக்கப்பட்டு அதற்கான அபராதம் சாரதியிடம் இருந்து பெறப்படும்.