ஐரோப்பா

ரஷ்யாவில் மக்கள் தொகையை அதிகரிக்க புதிய திட்டம்.! அறிமுகமாகும் அமைச்சகம்

ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளாக உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷ்யா, மிகப்பெரிய உயிரிழப்புகளை சந்தித்துள்ளதுடன், அந்நாட்டின் மக்கள் தொகையும் வேகமாக குறைந்து வருகிறது.

குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக பாலியல் அமைச்சகத்தை கொண்டு வர ரஷ்ய அரசு பரிசீலினை செய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கும், புதிய தம்பதிகளுக்கு குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கும் ஏற்றவாறு ஊக்கத்தை உருவாக்குவது இந்த அமைச்சகத்தின் பணியாக இருக்கும் என கூறப்படுகின்றது.

அதில், முக்கிய முயற்சிகளில் குடும்பங்களுக்கான நிதி ஊக்கத்தொகை, கருவுறுதல் ஆதரவு மற்றும் பொது பிரச்சாரங்கள் ஆகியவை அடங்கும். மேலும், கணவன் – மனைவி இடையே நெருக்கத்தை ஏற்படுத்துவதற்காக இரவு 10 மணி முதல் 2 மணி வரை இணைய சேவையை ரத்து செய்யவும், ஆண் பெண் சந்திப்புகளுக்கு பணம் வழங்கவும் அரசு பரிசீலிப்பதாக தெரிகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!