சிங்கப்பூரில் பாதசாரிகள் வீதியை கடக்க அறிமுகமாகும் புதிய நடைமுறை
சிங்கப்பூரில் பாதசாரிகள் வீதியை கடக்க புதிய நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் சமிக்ஞைக் கம்பத்தில் பொத்தானை அழுத்த வேண்டும். விரைவில் அது தேவையிருக்காது.
பொத்தனை நுண்ணலை உணர்கருவியாக மாற்றப் போவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இனிமேல் வீதியை கடக்க விரும்பும் பாதசாரிகள் பொத்தனை அழுத்தாமல் கை அசைத்தால் மட்டும் போதும். ‘பச்சை மனிதன்’ சமிக்ஞை தோன்ற அது வழியமைக்கும்.
சிங்கப்பூர் முழுதும் உள்ள சமிக்ஞைக் கம்பங்களின் பொத்தான்கள் அடுத்த ஆண்டு இறுதியிலிருந்து கட்டங்கட்டமாக மாற்றப்படும். பணியை முடிக்க 6 ஆண்டுகள் எடுக்கும் என்று நம்பப்படுகிறது.
கை அசைக்கும் நடைமுறை 2022இல் குறிப்பிட்ட இடங்களில் சோதிக்கப்பட்டது. அப்போதிலிருந்து நுண்ணலை உணர்கருவிகளை மேம்படுத்தியுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
புதிய நடைமுறையில் கண் பார்வை இல்லாதோருக்கு ஏற்ற அம்சங்களும் இடம்பெறும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.