இலங்கை

இலங்கையில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு புதிய அதிகாரி!

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவியில் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவி செப்டம்பர் 24 ஆம் திகதி முதல் வெற்றிடமாக உள்ளது.

இதன்படி, தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றும் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவியில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரியாவார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த இது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!